சாவகச்சேரி, கல்வயல் ஆயிலடி வீரகத்தி விநாயகர் ஆலயம் நடாத்தும் தீபாவளி விழாவும், பரிசளிப்பு விழாவும் ஆலய அறநெறிப் பாடசாலை அதிபர் விவேகானந்தன் மயூரன் தலைமையில் எதிர்வரும் 20 ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறவுள்ளது.
கோப்பாய் ஆசிரியர் கலாசாலை சிரேஸ்ட விரிவுரையாளர் சைவப்புலவர் சி. கா. கமலநாதன் பிரதம அதிதியாகவும், ஆசிரியர் கலாசாலை சிரேஸ்ட விரிவுரையாளர் கவிஞர் வேல்.நந்தகுமார் மற்றும் தொல்லியல் திணைக்கள மேலாய்வு உத்தியோகத்தர் அருள்மொழிவாருதி க.கயிலைவாசன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
சிறப்பு நிகழ்வாக ‘பண்பிழந்த தமிழ்க் கலாசாரம்’ எனும் விடயப்பொருளில் வில்லிசையும், பரிசளிப்பும் இடம்பெறவுள்ளது.


















