-மன்னாரில் 12 பேர் படுகாயம்-
-சு.பாஸ்கரன்-
மன்னார் வெள்ளாங்குளம் சந்தி பகுதியில் உழவுஇயந்திரமொன்று தடம்புரண்டதில் பன்னிரெண்டு பேர் படுகாயமடைந்தனர்.
மன்னார் இலுப்பைக் கடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலுப்பைகடவையில் இருந்து ஏ-32 வீதி வழியாக வெள்ளங்குளம் நோக்கி பயணித்த உழவுஇயந்திரம் ஒன்று துணுக்காய் நோக்கி திருப்ப முற்பட்ட சமயம் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இதில் உழவு இயந்திரத்தின் இழுவைப் பெட்டியில் இருந்த பன்ணிரெண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் முழங்காவில் வைத்தியசாலை மற்றும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து தொடர்பான விசாரணைகளை இலுப்பைக்கடவை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த உழவு இயந்திரத்தில் 15 பேர் வரையில் மரண வீடு ஒன்றுக்கு சென்று வெள்ளங்குளம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போது இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


















