-விழிப்புணர்வுடன் இருக்குமாறு வைத்தியர்கள் எச்சரிக்கை-
நாட்டில் தற்போது 5,000 நோயாளர்கள் சிறுநீரக நோயின் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக சிறுநீரக நோய் விசேட வைத்திய நிபுணர் நாலக ஹேரத் தகவல் வெளியிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தகவல் வெளியிடுகையில்:-
நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், வருடத்திற்கு ஒரு முறையாவது தங்களது சிறுநீரகங்களைப் பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும். சிறுநீரக நோய்க்கான பிரதான காரணங்களாக நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தமே காணப்படுவதாக வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆரம்பக்கட்டப் பரிசோதனைகள் இன்மையால், பல நோயாளர்கள் இந்நோயின் இறுதிக்கட்டத்தை எட்டிய பின்னரே தமக்கு நோய் இருப்பதைக் கண்டறிகின்றனர்.
நாட்டில் தற்போது 5,000 நோயாளர்கள் சிறுநீரக நோயின் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. அத்துடன், ஆண்டொன்றுக்கு சுமார் 300 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் மாத்திரமே மேற்கொள்ளப்படுவதாகவும் அந்தப் பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது என்றார்.


















