சீனாவின் முதல் இலங்கை உணவகமான ‘சினாரா’, சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில், இல. 3015, 3வது மாடியில், பெய்ஜிங் சாவோய் சோஹோவில் 8 ஆம் திகதி திறக்கப்பட்டது.
இலங்கை உணவின் சுவையை சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கத்துடன், இலங்கையின் இளம் தொழில்முனைவோரான சிரஞ்சயா உடுமுல்லகே இந்த உணவகத்தைத் தொடங்கினார்.
இது சீனாவில் பணிபுரியும் மற்றும் படிக்கும் இலங்கையர்களுக்கு சுவையான இலங்கை உணவை அனுபவிக்கவும், சீன நாட்டினர் இலங்கை உணவு வகைகளை அனுபவிக்கவும் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது.
இலங்கையின் பல பிராண்ட் உணவகங்களுக்கு பங்களித்த சமையல்காரர் நிஷாத் சமரநாயக்க, ‘சினாரா’ உணவகத்தின் தலைமை சமையல்காரராகவும், சீனாவின் குன்மிங் பல்கலைக்கழகத்தில் வணிக முகாமைத்துவ பட்டதாரியான மனோஜ் லியனகே, உணவக முகாமையாளராகவும் உள்ளார்.
மேலதிகமாக, சமையல் தகுதிகள் மற்றும் அனுபவமுள்ள இரண்டு இளம் இலங்கை சமையல்காரர்கள் கொண்ட குழு இலங்கை உணவு வகைகளின் சுவையை பரிமாறுகின்றனர்.
‘சினாரா’ உணவகம் வெறும் உணவகம் மட்டுமல்ல, அங்கு வருகைதரும் சீனர்களுக்கு இலங்கையைப் பற்றிக் கற்பிக்கவும், அதன் மூலம் நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
சினாரா உணவகச் சங்கிலி, எதிர்காலத்தில் பெய்ஜிங்கிற்கு மட்டுமல்ல, சீனாவின் பிற முக்கிய நகரங்க ளுக்கும் விரிவடையவுள்ளது, மேலும் இது சீனாவில் கல்வியை முடிக்கும் இலங்கை மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்.















