முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரும், புதிய மக்கள் முன்னணியின் தலைவருமான சுகீஷ்வர பண்டார பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் செலவினத் தலைப்பின் கீழ் இரண்டு பதவிகளுக்கான வேதனப் பணத்தைப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், மத்திய குற்ற விசாரணைப் பணியகத்தினால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதன்படி, சந்தேகநபருக்கு தலா 100 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளும், ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையும் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும், அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


















