இலங்கையின் சுதந்திர தினத்தை சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இணைத்து நினைவுகூரும் வகையில் கடந்த 4 ஆம் திகதி கொழும்பு (மொரட்டுவ), கண்டி (மினிப்பே–ஹசலகா) மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் சமூக வழிநடத்தலுடன் மரநடுகை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

நாட்டின் மேற்கு, மத்திய மற்றும் வடக்கு பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தி நடத்தப்பட்ட மரநடுகை நிகழ்வுகளில் 350 – க்கும் மேற்பட்ட பொதுமக்கள், இளைஞர்கள், உள்ளூர் அரசாங்க அதிகாரிகள் மற்றும் சமூக பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு பிராந்தியமும் தத்தமது சமூக மற்றும் புவியியல் தன்மைகளை பிரதிபலித்திருந்தாலும், நீண்டகால சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் ஒருங்கிணைந்த மரநடுகை நடவடிக்கைகளில் அனைவரும் பங்கேற்றதை நிகழ்வுகளில் காணக் கூடியதாக இருந்தது.

இந்த நிகழ்வுகள் சர்வதேச அமைதியமைப்பான Heavenly Culture, World Peace, Restoration of Light (HWPL), International Peace Youth Group (IPYG) ஆகிய அமைப்புகளால் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன.



















