-எச்சரிக்கும் பொலிஸ் பேச்சாளர்-
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் நடைமுறையில் உள்ள சட்டங்களை மீறுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது சுற்றுச்சூழல் சட்டங்களை மீறியதாக 23 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்தார்.
மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எதிர்காலத்திலும் நாடு முழுவதும் இதேபோன்ற விசேட சோதனை நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சட்டங்களை மீறுவோருக்கு எவ்வித தளர்வும் வழங்கப்படமாட்டாது எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வலியுறுத்தினார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பாகும் என்றும், பொதுமக்கள் இத்தகைய சட்டவிரோத செயல்பாடுகள் குறித்து தகவல் வழங்கினால் அதற்கேற்ப உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


















