பெலவத்தை சீனி தொழிற்சாலை வளாகத்தில் தெரிவு செய்யப்பட்ட சில இடங்களை சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் வகையிலான சுற்றுலா மையமாக அபிவிருத்தி செய்யக்கூடிய ஆற்றல்வளம் காணப்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த தெரிவு செய்யப்பட்ட இடங்களை அரச – தனியார் பங்குடமை முறையின் கீழ் அபிவிருத்தி செய்வதற்காக பொருத்தமான முதலீட்டாளர்களை அடையாளம் காணும் நோக்கில், சரியான பெறுகை வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, விருப்பக் கோரல்களை பெற்றுக்கொள்வதற்கும், அதற்குத் தகுதி பெறும் முதலீட்டாளர்களிடமிருந்து கருத்திட்ட முன்மொழிவுகளை கோருவதற்கும் நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான யோசனையை கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அமைச்சர் அமைச்சரவைக்கு சமர்ப்பித்த நிலையில், அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் 2026 ஜனவரி 12 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


















