வாதுவையில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வாதுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூன்று மாடி கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. களுத்துறை நகராட்சி மன்ற தீயணைப்புத் துறையின் அதிகாரிகள் தீயினை இரண்டு தீயணைப்பு வாகனங்களைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தினர்.
மேலும் இரண்டாவது மாடியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மூன்றாவது மாடியில் சிக்கியவர்களை மீட்க தீயணைப்பு வீரர்கள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.
ஹோட்டலில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டதாகவும், இரண்டாவது மற்றும் மூன்றாவது தளங்களில் தங்கியிருந்த எட்டு பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளது.
விமான அனுமதிச் சீட்டுகள் உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும் அறைகளில் இருந்த பல்வேறு சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.


















