ஜனசக்தி குழுமத்தின் துணை நிறுவனமும், முன்னர் ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி என அறியப்பட்டதுமான, ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி மற்றும் டொயோட்டா லங்கா (பிரைவட்) லிமிடெட் ஆகியன மூலோபாய பங்காண்மைக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் அண்மையில் கைச்சாத்திட்டிருந்தன.
இந்தக் கைகோர்ப்பினூடாக, ஜனசக்தி பைனான்ஸ் நிறுவனத்தின் நிதிசார் வலிமை மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய நிபுணத்துவம் ஆகியன டொயோட்டா லங்காவின் வாகன நிபுணத்துவத்துடன் ஒன்றிணைக்கப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு பரந்தளவு புத்தாக்கமான மற்றும் நெகிழ்ச்சியான லீசிங் தீர்வை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
டொயோட்டா லங்கா நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்டு, இறக்குமதி செய்யப்பட்டு மற்றும் விற்பனை செய்யப்படும் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கு இந்தப் பங்காண்மையின் பிரதான அங்கமாக, இணைந்த லீசிங் ஊக்குவிப்புத் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புத்தம்புதிய அல்லது ஏற்கனவே உரிமைகொள்ளப்பட்ட வாகனமாக இருந்தாலும், வாடிக்கையாளர்களுக்கு தற்போது சிக்கனமான, இலகுவாக பெற்றுக் கொள்ளக்கூடிய மற்றும் ஒப்பற்ற லீசிங் தெரிவுகளை தமது நிதி இலக்குகள் மற்றும் வாழ்க்கை முறைத் தேவைகளுக்கு பொருந்தும் வகையில் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.


















