வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக, மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 41 (1) சரத்தின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
உலகளாவிய முதலீட்டுப் பங்களிப்பு தொடர்பில் ஹனீப் யூசுப்பின் அனுபவம் மற்றும் இலங்கையின் தனியார் துறையின் வளர்ச்சிக்கு அவர் அளித்த நீண்டகாலப் பங்களிப்பைக் கருத்தில் கொண்டு, அரசாங்கத்தின் பொருளாதார மீள் எழுச்சித் திட்டத்திற்கு பங்களிக்கும் அவரது திறனைப் பாராட்டி இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.


















