-நாமல் ராஜபக்ஷ எம்.பி-
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராக நாங்கள் போராடினோமே தவிர தமிழர்களுக்கு எதிராக போராடவில்லையென குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வடக்குக்கு சென்று ஜனாதிபதி இனவாதம் பேசக்கூடாதெனவும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற டித்வா புயலின் பின்னர் நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு, மேலும் தெரிவிக்கையில்:
நாங்கள் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராக போராடினோமே தவிர தமிழர்களுக்கு எதிராக போராடவில்லை. தமிழ் மக்கள் கதிர்காமத்துக்கு செல்வதற்கு முழுமையாக சுதந்திரம் உள்ளது.
ஜனாதிபதி வடக்குக்கு சென்று இனவாதத்தை தூண்டிவிடக் கூடாது. அரசாங்கம் தமக்கு ஏற்றது போல் சட்டத்தை பயன்படுத்திக் கொள்கிறது. கடந்த கால ஊழல் மோசடிகள் குறித்து அவதானம் செலுத்துவதை போன்று 323 கொள்கலன்கள் விடுவிப்பு தொடர்பிலும் அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றார்.


















