-20 மின்விசிறிகள் பறிமுதல் – தொழிலதிபருக்கு 40 ஆயிரம் அபராதம்-
ஜப்பானிய வர்த்தக பெயர்கள் (Brand names) மீதான நுகர்வோரின் நம்பிக்கையைப் பயன்படுத்தி, போலி மின்விசிறிகளை விற்பனை செய்து வந்த வர்த்தகர் ஒருவர் நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
பிலியந்தலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையின் போது, அந்த மின்விசிறிகளில் முறையான இறக்குமதியாளர் அல்லது உற்பத்தியாளர் பற்றிய எந்தவொரு தகவலும் இல்லை என்பது கண்டறியப்பட்டது.
இது தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குறித்த தொழிலதிபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில் சாட்சியங்களாக சமர்ப்பிக்கப்பட்ட 20 மின்விசிறிகளையும் பறிமுதல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், அவருக்கு 40,000 ரூபாய் அபராதம் விதித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இவ்வாறான மோசடிகளில் சிக்காமல் இருக்க நுகர்வோர் எச்சரிக்கையுடன் இருக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது


















