மிஹிந்தலை ரஜ மகா விகாரை வளாகத்தில் ஜெர்மனிய நாட்டைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணியிடம் அநாகரீகமாக நடந்து கொண்டமை தொடர்பில் தொல்பொருள் திணைக்கள ஊழியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
நேற்று முன் தினம் இடம்பெற்ற மத ஊர்வலத்தின் போது காந்தக தூபியை பார்வையிடச் சென்ற சுமார் 30 வயதுடைய ஜெர்மனியப் பெண்ணை, சந்தேகநபர் பலவந்தமாக மக்கள் நடமாட்டம் குறைவான பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் அழைத்துச் சென்று துன்புறுத்த முயன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நிலையில், சம்பவத்தை அவதானித்த வழிபாட்டிற்காக வந்திருந்த மூன்று இளைஞர்கள் உடனடியாகச் செயல்பட்டு, குறித்த பெண்ணை சந்தேகநபரிடமிருந்து மீட்டுள்ளனர்.
சம்பவத்திற்குப் பின்னர் பாதிக்கப்பட்ட சுற்றுலாப் பயணி மிஹிந்தலை பொலிஸில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.


















