முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சி விசாரணை நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
வெளிநாட்டு கடவுச்சீட்டு ஒன்றைப் பெறுவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு பொய்யான தகவல்களைச் சமர்ப்பித்தமை மற்றும் சரியான விசாவின்றி இலங்கையில் தங்கியிருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இவ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் வாசித்துக் காட்டப்பட்ட நிலையில், அக் குற்றச்சாட்டுகளுக்கு தான் நிரபராதி என டயானா நீதிமன்றத்தில் அறிவித்தார்.
சாட்சியங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டதோடு, வழக்கின் மேலதிக சாட்சி விசாரணை டிசம்பர் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


















