டித்வா புயலுக்குப் பின்னர் நாடு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதை பல சுற்றுலாத் தலங்களை மீண்டும் திறப்பதாக இலங்கை சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.
இலங்கை சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பயன்பாடுகள், போக்குவரத்து வலையமைப்புகள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் பெரும்பாலும் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகக் தெரிவித்துள்ளது.
சுற்றுலாத் தலங்கள், தங்குமிடங்கள் மற்றும் துணை உள்கட்டமைப்புகள் மீண்டும் திறக்கப்படுகின்றன, இது சர்வதேச பார்வையாளர்களை வரவேற்க இலங்கையின் தயார்நிலையை மீண்டும் உறுதிப்படுத்துகின்றது.
பல வனவிலங்கு தளங்கள், தேசிய பூங்காக்கள், கடல் சுற்றுலா, வன தளங்கள் மற்றும் கலாச்சார தளங்கள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் உள்ள நீர்கொழும்பு, களுத்துறை, பாசிக்குடா, ஹிக்கடுவை, பெந்தோட்டை/பேருவளை, எல்ல மற்றும் அறுகம்குடா போன்ற சுற்றுலா வலயங்களில் சீரான காலநிலையை நிலவுகின்றது.
















