டித்வா பேரிடரினால் வீதி வலையமைப்பில் சுமார் 190 பில்லியன் ரூபாய் சேதம் ஏற்பட்டிருப்பதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் இயக்குனர் ஜெனரல் விமல் கண்டம்பி கூறியுள்ளார்.
இம்முறை அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை. கண்டி மாவட்டம் நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் வீதிகள் முற்றாக சேதமடைந்தன.
இலங்கை மின்சாரசபை தற்போது மின் மாற்றிகளை மாற்றி மின் கட்டமைப்பு சேதங்களை மதிப்பிட்டுக் கொண்டிருக்கின்றது. மறுகட்டமைப்புக்கான வளங்களைத் திரட்டுதல் மற்றும் ஒதுக்குவதை மேற்பார்வையிட ஒரு பொது – தனியார் மேலாண்மைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
மேலாண்மைக் குழுவிற்கு தொழிலாளர் அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தலைமை தாங்குகிறார். பல்வேறு துறைகளில் ஏற்பட்ட சேதம் மற்றும் மறுகட்டமைப்புக்கான நிதித் தேவைகள் குறித்த விரிவான மதிப்பீட்டைத் தயாரிப்பதற்காக அரசாங்கம் உலக வங்கியுடன் கலந்துரையாடல்களைத் தொடங்கியுள்ளது என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருக்கிறார்.
உலக வங்கி உலகளாவிய பேரிடருக்குப் பிந்தைய விரைவான சேத மதிப்பீட்டையும் நடத்தும். அரசாங்கம் சுமார் இரண்டு வாரங்களுக்குள் மதிப்பீட்டைப் பெறும் என்று எதிர்பார்க்கிறது.
















