டித்வா பேரிடரினால் சேதமடைந்த வீதிகள், பாலங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகளை சீரமைக்கும் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.
இதன்படி, வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான சுமார் 820 வீதிகள் நிரந்தரமாக புனரமைப்பு செய்யப்படும். முதற்கட்டப் பணிகள், நேற்று நுவரெலியா – கெரண்டி – எல்ல பகுதியில் 45 குறிப்பிட்ட இடங்களை இலக்காக கொண்டு முதற்கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் சேதமடைந்த உட்கட்டமைப்புகளை இந்த ஆரம்ப கட்டம் உள்ளடக்கியுள்ளது.
சேதமடைந்த அனைத்து வீதிகளையும் இரண்டு ஆண்டு காலத்திற்குள் அவற்றின் முந்தைய நிலையை விட, உயர்ந்த தரத்திற்கு மீட்டெடுப்பதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டது. இதற்காக, ரூ.177 பில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


















