-துல்லியமான தரவுகளைப் பெற ஜனாதிபதி பணிப்பு-
டித்வா பேரிடரினால் பகுதியளவிலும், முழுமையாகவும் சேதமடைந்துள்ள வீடுகளை அடையாளம் கண்டு இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி ஜனாதிபதி அநுர பணித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுக்கிடையிலான சந்திப்பு நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
டித்வா சூறாவளியினால் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறையை ஆராயும் நோக்கத்துடன் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வாழும் மக்கள் மீண்டும் இதுபோன்ற அனர்த்தத்தினால் பாதிக்கப்படாமல் இருக்க நீண்டகால தீர்வினை வழங்கவேண்டும். அதற்கான தரவுகளை பெறுங்கள்.
இதுவரை நடத்தப்பட்ட கணக்கெடுப்புகளின்படி மண்சரிவுகளினால் 1289 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும், 44,574 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
















