ஐக்கிய அரவு எமிரேட்டில் இயங்கும் டுபாய் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் இதுவரை ரஜத்தனவில்ல வில் 8 சடலங்களை தமது மோப்ப நாய்கள் ஊடாக கண்டுபிடித்தனர்.
இந்த அணியினர் தமது வாகனங்கள், அம்புலன்ஸ் மற்றும் மோப்ப நாய்கள், வல்லங்கள் சகிதம் இலங்கையை வந்தடைந்து அனர்த்தத்தில் காணாமல் போனோர்களது சடலங்களைத் தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக நாட்டு மக்கள் அவர்களது உன்னத சேவையை ஆதரவளித்து, சமூக ஊடகங்களில் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
இவர்களது சகல மொழிபெயர்ப்பு, கொழும்பில் உள்ள தூதரக அதிகாரி அப்புதல்லாஹ் மற்றும் அப்பிரதேசத்தில் உள்ள இராணுவ அதிகாரி, பொலிஸார் இணைந்து இச்சேவையினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


















