உலக சந்தையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை அதிகரித்தமை காரணமாக நாட்டிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
செட்டியார் தங்க சந்தை தரவுகளுக்கு அமைய நேற்று திங்கட்கிழமை 338,600 ரூபாவாக காணப்பட்ட 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை இன்று செவ்வாய்க்கிழமை 11,000 ரூபாவால் அதிகரித்து 349,600 ரூபாவாக காணப்படுகிறது.
அதேவேளை, நேற்றைய தினம் 368,000 ரூபாவாக காணப்பட்ட 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை இன்று திங்கட்கிழமை 380,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.
உலக சந்தையில் இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 130 டொலர் அதிகரித்து 4816 டொலராக காணப்படுகிறது.


















