சட்ட விரோதமாக ஐந்து கோடியே தொண்ணூறு இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை கடத்த முயன்ற இலங்கை தனியார் நிறுவன விமான பணிப்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கைது நடவடிக்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று சுங்க அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் கொழும்பை சேர்ந்த 27 வயது விமானப் பணிப்பெண் என தெரிவிக்கப்படுகிறது.
கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்திலிருந்து விமானக் குழுவினருக்கான வெளியேறும் வாயில் வழியாக வெளியேற முயன்றபோது, அவரின் பயணப் பொதியில் குறித்த தங்க ஆபரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அவரின் பயணப்பொதியில் 1.163 கிலோகிராம் எடையுள்ள நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்டுகள் காணப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.


















