Prime Lands Residencies PLC அதன் டிஜிட்டல் சிறப்புக்காக, 15ஆவது BestWeb.lk விருதுகள் நிகழ்வில் தொடர்ச்சியான இரண்டாவது வருடமாகவும் தங்க விருதை சுவீகரித்துள்ளது.
The Grand Ward Place இணையத்தளத்துக்காக சிறந்த கூட்டாண்மை இணையத்தள பிரிவில் தங்க விருதை இந்த நிறுவனம் பெற்றுக் கொண்டது.
இலங்கையின் ரியல் எஸ்டேட் பிரிவில் தொலைநோக்குடைய, நவீனத்துவமான ஒன்லைன் பிரசன்னத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்தக் கட்டமைப்பு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வாடிக்கையாளர்களுக்கு சொத்துத் தெரிவுகள் தொடர்பில் ஒப்பற்ற அணுகலை மேற்கொள்ளவும், அத்தியாவசியமான தகவல்கள் மற்றும் வர்த்தக நாம ஈடுபாட்டு தெரிவுகளையும் Prime Lands Residencies கொண்டிருப்பதை கௌரவிக்கும் வகையில் இந்த விருது அமைந்துள்ளது.
Prime Lands Residencies தொடர்ச்சியாக தங்க விருதுகளை வெற்றியீட்டியுள்ளதனூடாக தொழிற்துறை தலைமைத்துவத்தின் அடிப்படையில் செயலாற்றுவதுடன், புத்தாக்கம், வாடிக்கையாளர் சேவை மற்றும் கூட்டாண்மை சிறப்பு ஆகியவற்றுக்காக இதுவரையில் பெற்றுள்ள பல கௌரவிப்புகளில் மேலும் ஒரு உள்ளடக்கத்தை சேர்த்துள்ளது.
இந்த விருதினூடாக நிறுவனத்தின் வெற்றிகரமான செயற்பாடுகளை பிரதிபலிப்பது மாத்திரமன்றி, இலங்கையின் தொடர்மனை பிரிவில் களத்திலும், ஒன்லைனிலும் புதிய நியமங்களை நிர்ணயிப்பதற்கான அதன் நோக்கை மீளுறுதி செய்வதாகவும் அமைந்துள்ளது.


















