ஹொரணை, தொம்பகொடவிலுள்ள இலங்கை இராணுவத்தின் மேஜர் ஒருவர் நேற்று தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்தார். துத்திரிபிட்டியைச் சேர்ந்த குறித்த அதிகாரி, அவரது வீட்டிலிருந்து தினமும் பணிக்கு வந்து சென்றதாகக் கூறப்படுகிறது.
பொலிஸாரின் கூற்றுப்படி, நான்கு நாட்களுக்கு முன்பு தான் அவருக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது. தன்னைத் தானே சுட்டு உயிரிழந்தமைக்கு தனிப்பட்ட காரணங்கள் இகக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


















