மாத்தளையில் தம்புள்ளை மாநகர சபைக்கு உட்பட்ட கடை ஒன்றில் தீப் பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தீப் பரவல் இன்று வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீப் பரவலின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
தம்புள்ளை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீப் பரவலை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறிருப்பினும், கடையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த பொலித்தீன்கள் தீயில் கருகி நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீப் பரவலுக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

















