தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவு தொடர்பில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று வெள்ளிக்கிழமை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்றைச் சமர்ப்பித்துள்ளது.
தரம் குறைந்த நிலக்கரி கொள்முதல் செயல்முறை மற்றும் அதன் மூலம் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து விசாரணை நடத்துமாறு கோரி அந்தக் குழு இந்த முறைப்பாட்டை முன்வைத்தது.
தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது அன்றைய ஜனாதிபதி அதில் தலையிடாதது போன்று, தரமற்ற நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணைகளிலும் தற்போதைய ஜனாதிபதி தலையிடமாட்டார் என தாம் நம்புவதாக அவர்கள் தெரிவித்தனர்.


















