நாட்டின் கல்வித் துறையில் மேற்கொள்ளப்படவுள்ள பாரிய மாற்றத்தின் ஒரு கட்டமாக, தரம் 6 மாணவர்களுக்காக திட்டமிடப்பட்டுள்ள கல்விச்சீர்திருத்தங்கள் எதிர்வரும் 2027 ஆம் கல்வி ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக இந்த ஆண்டு (2026) ஆரம்பிக்கப்படவிருந்த தரம் 6 இற்கான புதிய பாடத்திட்டம் மற்றும் சீர்திருத்தங்கள், சில தொழில்நுட்ப காரணங்களால் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தன.
குறிப்பாக, ஆங்கில பாட கற்றல் தொகுதியில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக, அதனை முழுமையாக மீளாய்வு செய்ய அமைச்சரவை தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


















