-இரு சகோதரிகள் உட்பட மூவர் கைது-
தளபாடங்கள் வழங்குவதாகக் கூறி இணையத்தில் விளம்பரங்களை பதிவிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல நபர்களிடமிருந்து ஒரு கோடி ரூபாவுக்கும் மேல் மோசடி செய்த மூன்று பெண்களை, மேல் மாகாண குற்றப் புலனாய்வுப் பிரிவு நேற்று கைது செய்துள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் மற்றும் அவர்களது மைத்துனி ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களிடமிருந்து ஒரு கைத்தொலைப்பேசி, தனியார் வங்கி விசா அட்டைகள் இரண்டு மற்றும் 87,000 ரூபா பணம் ஆகியவை மீட்கப்பட்டது.
இது தொடர்பாக மிரிஹான பொலிஸாருக்கு கிடைத்த முறைபாட்டுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.


















