தன்னுடைய தாயிற்கு வீடு கட்டுவதற்காக சேமித்து வைத்த 20 இலட்சம் ரூபா பணத்தினை, இலங்கையை மீளக் கட்டியெழுப்புவோம் திட்டத்திற்காக இலங்கையை சேர்ந்த இளைஞன் ஒருவர் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக இலங்கையில் தற்போது வரையில் 607 பேர் உயிரிழந்துள்ளதுள்ளனர்.
மேலும், பெருமளவான உடமைகள் அழிந்து, இலட்சக்கணக்கானோர் அநாதரவான நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இந்த நிலையில், பேரழிவில் சீர்குலைந்து போன நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டத்திற்கு உள்ளுர் மற்றும் புலம்பெயர் இலங்கையர்கள், நலன் விரும்பிகளால் நன்கொடைகள் மற்றும் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன்படி, இலங்கையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் தன்னுடைய தாயாருக்காக வீடு ஒன்று கட்டும் நோக்கில் சேமித்து வைத்த 20 இலட்சம் ரூபா பணத்தினை இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் திட்டத்திற்கு நன்கொடையாக வழங்கிவைத்தார்.
அவருடைய பதிவில், என்னுடைய அம்மாவிற்கு வீடு கட்டுவதற்காக இந்த பணத்தை சேமித்தேன். வீட்டினை பிறகு கட்டிக்கொள்ளலாம். இது எனது உதவி அல்ல, என்னுடைய கடமை என குறிப்பிட்டுள்ளார்.


















