மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல இடங்களில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 45,000 மில்லிலீற்றர் கசிப்பு போதைப்பொருளுடன் ஒரு பெண் உட்பட 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரையின் கீழ் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி ,தாழங்குடா, புதுக்குடியிருப்பு, நாவற்குடா, கல்லடி,கிரான்குளம் உட்பட பல இடங்களில் இத்திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது கசிப்பு விற்பனை செய்யும் இடங்கள் கசிப்பு உற்பத்தி நிலையங்கள் என்பன பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டது. மறைத்து வைக்கப்பட்ட நிலையிலும், விற்பனை செய்யப்பட்ட நிலையிலும் கைப்பற்றப்பட்ட கசிப்புடன் ஒரு பெண் உட்பட 11 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்
கைது செய்யப்பட்ட நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.


















