-சு.பாஸ்கரன்-
திருமுறிகண்டி ஏ-9 பிரதான வீதியின் அறிவியல் நகர் பகுதியில் நேற்று முன்தினம் பிற்பகல் கிளிநொச்சியில் இருந்து முறிகண்டி பகுதி நோக்கி பயணித்த கார் ஒன்று முறிகண்டி பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த சிறிய ரக மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு குறித்த விபத்து இடம்பெற்றது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பேரும் காயங்களுக்குள்ளாகி கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.
குறித்த விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து விபத்துக்கு உள்ளான காரில் காயமடைந்தவர்களை கார் சாரதி ஏற்றிச் சென்று வைத்தியசாலையில் அனுமதித்திருந்த நிலையில் இருவரும் உயிரிழந்தனர்.
குறித்த விபத்து தொடர்பாக முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


















