-பிரேமலதாவை வரவேற்ற ஸ்டாலின்-
நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், தே.மு.தி.க எந்தப் பக்கம் என்று நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் யாரும் எதிர்பாராத நகர்வாக தி.மு.க கூட்டணியில் இணைந்துள்ளது தே.மு.தி.க.
சென்னையில் தி.மு.க தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நேற்று வியாழக்கிழமை காலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு நடத்தினார். இச்சந்திப்பின் போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள் சேகர்பாபு உள்ளிட்டோர், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் இருந்தனர்.
இதன் போது வரும் தேர்தலில் 7 தொகுதிகள் வரையிலும், ஒரு ராஜ்யசபா சீட்டும் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


















