-ஞானத்தமிழ்-
தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையினால் தெங்குப் பொருள் ஏற்றுமதியாளர்கள், விற்பனைத் தரகர்கள், கொள்முதல் செய்வோர் மற்றும் தென்னாந்தோட்ட உரிமையாளர்களுக்கான பதிவு செய்தல் பதிவைப் புதுப்பித்தல் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இப்பதிவு, செயற்பாடு இம்மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் சம்மந்தப்பட்டோர் www.cda.gov.lk என்ற இணையத்தளத்திற்கு சென்று நிகழ்நிலை மூலமான பதிவுகளை மேற்கொள்ள முடியும் எனவும், பதிவு தொடர்பான மேலதிக தகவல் பெற விரும்புவோர் 0112421028 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
















