திருகோணமலை மாவட்டத்தில் தென்னைச் செய்கையாளர்களுக்கு வாயுத் துப்பாக்கிகள் வழங்கும் நிகழ்வு திருகோணமலையில் நேற்று இடம்பெற்றது.
இதன்போது தென்னைப் பயிர்ச்செய்கை சபையினால், தெரிவு செய்யப்பட்ட 27 பயனாளிகளுக்கு வாயுத் துப்பாக்கிகள் மானிய அடிப்படையில் வழங்கப்பட்டது.
அத்தோடு துப்பாக்கி இயக்குவதற்கான செயன்முறைப் பயிற்சியும் வழங்கப்பட்டது.
தென்னைத் தோட்டங்களை காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாக்கும் நோக்கில் இவ்வாயுத் துப்பாக்கிகள் வழங்கப்பட்டன.


















