இரண்டு தேங்காய்களை திருடியதற்காக ஒருவரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில் நபர் ஒருவருக்கு ஹோமாகம மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க நேற்று மரண தண்டணை விதித்துள்ளார்.
நியதகல பகுதியில் அமைந்துள்ள வயலில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக சட்ட மாஅதிபர் 2001 ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
வழக்கின் சாட்சிகள் வழங்கிய சாட்சியங்களை மதிப்பாய்வு செய்த நீதிபதி, இந்த வழக்கின் முதல் பிரதிவாதி மீது அரச தரப்பு முன்வைத்த கொலைக் குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவர் கொலைக் குற்றச்சாட்டில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது.


















