கல்வி அமைச்சு மற்றும் கல்வி அமைச்சின் உடற்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை திணைக்களம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த 38 ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் வவுனியா மாணவன் 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் புதிய சாதனை படைத்தார்.
தியமக, மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற மெய்வல்லுநர் போட்டியில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியை 15 நிமிடங்கள், 23.40 செக்கன்களில் நிறைவு செய்ததன் மூலம் வவுனியா காமினி மகா வித்தியாலய மாணவன் ஈ.விகிர்தன் புதிய சாதனை படைத்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
இதே போட்டியில் திகனை ரஜவெல்ல இந்து தேசிய பாடசாலை மாணவன் பி.ஆர்.விதுஷன் (15:31.79) வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.


















