2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தம்) சட்டத்தின் பிரிவு 4 இன் விதிகளின்படி, தேசிய மின்சாரக் கொள்கை வரைவு தயாரிக்கப்பட்டு, பொதுமக்களின் கருத்துகள் பெறப்பட்டு வருகின்றன.
குறித்த வரைவு எரிசக்தி அமைச்சின் வலைத்தளமான https://energymin.gov.lk/ இல் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.இந்நிலையில்,ஆர்வமுள்ள தரப்பினர் தங்கள் கருத்துக்களை ஜனவரி 9 அன்றோ அல்லது அதற்கு முன்னர் பின்வரும் முறைகள் மூலம் சமர்ப்பிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
தபால் மூலம் செயலாளர், எரிசக்தி அமைச்சகம், எண். 437, காலி வீதி, கொழும்பு 03 என்னும் முகவரிக்கோ, மின்னஞ்சலில் neac@energymin.gov.lk என்ற முகவரியூடாகவோ அனுப்ப முடியும்.
0112 574 752 என்ற தொலைநகல் மூலமும் வழங்க முடிவதுடன் இது தொடர்பான மேலதிக தகவலை 0112 574 922 (விரிவாக்க எண் 509/510/403) என்ற எண்ணை அழைக்க முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


















