தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராக தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் மதகுரு வேலன் சுவாமி உட்பட 5 தமிழர்கள் பொலிஸாரால் காட்டுமிராண்டித் தனமாக தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டதனை கண்டித்து பிரித்தானியாவில் பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராக மக்களால் முன்னெடுக்கப்படும் தொடர் போராட்டத்தில் கடந்த மார்கழி 21 ஆம் திகதி அன்று மதகுரு வேலன் சுவாமி உட்பட 5 தமிழர்கள் பொலிஸாரால் காட்டுமிராண்டித் தனமாக தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டதனை கண்டித்தும், தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் கோரியும் சனிக்கிழமை லண்டன் டோவ்னிங் பகுதியில் குறித்த கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான புலம்பெயர் உறவுகள் கலந்துகொண்டனர்.


















