பொகவந்தலாவ பொகவானை தோட்டப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து தொட்டிலில் தொங்கிய நிலையில் 13 வயதுச் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த சிறுமியின் வீட்டிற்கு உறவினர்கள் வந்திருந்தபோது உறவினரின் குழந்தைக்காக கட்டப்பட்ட தொட்டிலில் குறித்த சிறுமி விளையாடிக் கொண்டிருந்த நிலையில் தொட்டிலில் தொங்கிய நிலையில் காணப்படுவதாக சிறுமியின் உறவினர்கள் தெரிவித்தனர்.
சிறுமி தொட்டிலில் தொங்கிய நிலையில் இனங்கண்ட சிறுமியின் சகோதரன் அயலவர்களை அழைத்துக் கூறியதை அடுத்து சிறுமியை மீட்டெடுத்த அயலவர்கள் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை குறித்த சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பொகவந்தலாவ பொகவானை தோட்டத்தைச் சேர்ந்த 13 வயதுடைய மதுமதன் ஜென்சியா என்ற சிறுமி என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


















