-வைத்தியர் யசோமா வீரசேகர-
நாட்டில் கடந்த வருடம் புதிதாக அடையாளம் காணப்பட்ட தொழுநோயாளிகளில் சுமார் 10 வீதம் பேர் 15 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் என தொழுநோய் ஒழிப்பு பிரச்சாரத்தின் இயக்குநர் வைத்தியர் யசோமா வீரசேகர தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு முமலும் தெரிவிக்கையில்:
நாட்டில் கடந்த வருடம், 1,282 தொழுநோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இவ்வாறு புதிதாக அடையாளம் காணப்பட்ட நோயாளிகளில் கிட்டத்தட்ட எட்டு வீதம் பேர் ஏற்கனவே நோயறிதலின் போது குறைபாடுகளை உருவாக்கியிருந்தனர்.இந்நிலையில், தேவையான அனைத்து சிகிச்சை முறைகளும் அரசு வைத்தியசாலைகளில் இலவசமாக வழங்கப்படுவதுடன், சிகிச்சை வழங்குவதில் எவ்வித தாமதமும் ஏற்படவில்லை.
இதேவேளை புதியதாக அடையாளம் காணப்பட்ட நோயாளிகளில் சுமார் 10 வீதம் பேர், அதாவது சுமார் 123 பேர், 15 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் என்றார்.


















