இலங்கையின் பிரபல தொலைக்காட்சி நடிகரான நளின் பிரதீப் உடுவெல, புற்றுநோய் காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை காலை காலமானார். தனது 56ஆவது வயதில் அவர் உயிரிழந்துள்ளார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நளின் பிரதீப், மகரகம அபேக்ஷா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை காலமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து, தனது தனித்துவமான நடிப்புத் திறமையின் மூலம் நளின் பிரதீப் உடுவெல ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர்.
நளின் பிரதீப் உடுவெலவின் மறைவு இலங்கை கலைத்துறைக்கு ஒரு பேரிழப்பாகக் கருதப்படுகிறது.

















