உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் நேற்றிரவு 8.30 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
தமிழகத்தின் அரசியல் பிரமுகர்கள் பலரும் ரோபோ சங்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ரோபோ சங்கர் மறைந்த செய்தியறிந்து வருந்தமடைந்ததாக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இவரின் திடீர் மறைவையொட்டி நடிகரும், மநீம தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன், பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாரதிய ஜனதாக் கட்சியின் பிரமுகர் நயினார் நாகேந்திரன், தமிழ்நாடு காங்கிரஸ் பிரமுகர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



















