பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய குற்றம் மற்றும் போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபடும் சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக, பிரதேச மட்டத்தில் உள்ள அனைத்து பிராந்திய பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கிய விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நேற்றுமுன்தினம் சந்தேகத்தின் பெயரில் சுமார் 28 ஆயிரத்து 886 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றங்களுடன் தொடர்புடையதாக நேரடியாக 860 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளுக்கமைய 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திறந்த பிடியாணையின்பேரில் 299 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம், மதுபோதையில் வாகனம் ஓட்டிய 156 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 எனவும் பிற போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில் 3656 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




















