அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவுவதற்காக வருகை தந்த அமெரிக்க குழு நேற்று ஞாயிற்றுக்கிழமை நாட்டை விட்டு புறப்பட்டது.
எமது நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு என்பன ஏற்பட்டது. இதன்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்கள் மற்றும் மீட்பு சேவைகளுக்காக அமெரிக்காவின் சி-130 விமானங்கள் இரண்டும் 60 பேர் கொண்ட குழுவினரும் 2025.12.07 முதல் 2025.12.13 வரை எமது நாட்டில் பணியாற்றினர்.
இவர்கள் கட்டுநாயக்க மற்றும் ரத்மலான விமானப்படை தளங்களில் இருந்து யாழ்ப்பாணம், மத்தள, அம்பாறை மற்றும் அனுராதபுரம் ஆகிய அம்பாறை மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரணப் பொருட்களை கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நேற்றைய தினம் அவர்களின் பணியை நிறைவு செய்து ஓர் விமானமும், அதன் பணியாளர்களும் நாட்டை விட்டு புறப்பட்டனர்.
















