இலங்கையில் உள்ள 10047 பாடசாலைகளில் 3065 பாடசாலைகளில் 10க்கும் குறைவான ஆசிரியர்களே பணியாற்றி வருவதாக புள்ளிவிபரத் திணைக்களம் கூறியுள்ளது.
2025ம் ஆண்டுக்கான கணக்கெடுப்புகளின் பிரகாரம் நாட்டில் 10047 பாடசாலைகள் உள்ள நிலையில் 3065 பாடசாலைகளில் 10ற்கும் குறைவான ஆசிரியர்களே உள்ளனர்.
குறித்த பாடசாலைகளில் ஒன்று தேசியப் பாடசாலையாகும், நாட்டில் 1645 பாடசாலைகளில் 50க்கும் குறைவான மாணவர்களே கல்வி கற்றுவருகின்றனர்.
இந்த பாடசாலைகளில் 1 தேசிய பாடசாலையும், 1644 மாகாண பாடசாலைகளும் உள்ளன. 51 தொடக்கம் 100 மாணவர்களை கொண்ட 1648 பாடசாலைகள் உள்ளன.
அந்தப் பாடசாலைகள் அனைத்தும் மாகாணப் பாடசாலைகளாகும். மேலும் 2024ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ம் ஆண்டில் அரச பாடசாலைகளில் 1ம் தரத்திற்கு, சேர்ந்த மாணவர்கள் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது. 2025ஆம் ஆண்டில் தரம் ஒன்றில்; 266,281 மாணவர்கள் சேர்க்கப்பட்டதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.


















