நாடளாவிய ரீதியில் உள்ள மேல் நீதிமன்றங்களில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
1998 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி நாடளாவிய ரீதியில் உள்ள மேல் நீதிமன்றங்களில் 4,289 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த வழக்குகளில் 1,683 வழக்குகள் ஜனவரியில் விசாரணைக்காக மீண்டும் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


















