இயற்கை அனர்த்தங்களால் சேதமடைந்த நானுஓயா – பதுளை ரயில் பாதைகள் கட்டம்.. கட்டமாக புனரமைப்பு செய்யப்பட்டுவரும் நிலையில் அடுத்த இரு மாதங்களில் சேவை ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
அனர்த்தத்தால் சேதமடைந்த வீதிகள் மற்றும் புகையிரத பாலங்களை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படுகிறது.தற்போது வடக்கு மற்றும் கிழக்குக்கான புகையிரத சேவைகள் முழுமையாக ஆரம்பிக்கப்பட்டன.
அனர்தங்களால் மலையகத்துக்கான புகையிரத சேவைகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தன. தொடர்ச்சியான புனரமைப்பு பணிகளுக்கு மத்தியில் பதுளை – அம்பேவல வரையிலான புகையிரத சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டன.
நானுஓயா – பதுளை புகையிரத சேவையை இன்னும் இரண்டு மாதங்களில் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம். மலையகத்துக்கான புகையிரத சேவை முழுமையாக வழமைக்குத் திரும்ப ஒருவருடமேனும் செல்லும் என்றார்.


















