நாமல் ராஜபக்சவை சிறையில் அடைத்தாலும் அவரை ஜனாதிபதியாக்கியே தீருவோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மக்கள் ஆணை எமது பக்கம் திரும்பும் போது, நாமல் ராஜபக்ஷவை எப்படியாவது சிறையில் அடைக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது.
எனவே எதற்கும் நாம் தயாராகவே இருக்கின்றோம். சிறையில் அடையுங்கள். அவர் உள்ளே இருந்தாலும் வெளியே இருக்கும் நாம் அவர் உள்ளே இருக்கும் போது ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டால், நாமல் ராஜபக்ச சிறையில் இருந்து கொண்டே வெளியே ஜனாதிபதியாக மாறினார் என்பது வரலாற்றில் இடம்பிடிக்கும். அதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள் என அவர் தெரிவித்தார்.
















