பல்லேவெல, பந்துராகொட பகுதியில் நாய் கொண்டு வந்த பந்து போன்ற பொருள் வெடித்ததில், சிறுவன் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சிறுவன் வீட்டில் இருந்தபோது, அவர்களது வளர்ப்பு நாய் பந்து போன்ற பொருளொன்றை கவ்விக்கொண்டு வீட்டிற்குள் வந்துள்ளது. அதனை சிறுவன் நாயிடமிருந்து எடுத்து, விளையாடிக்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக அந்தப் பொருள் வெடித்தது.
இதனால் படுகாயமடைந்த சிறுவன், உடனடியாக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பல்லேவெல பொலிஸார் தெரிவித்தனர்.


















