2026 ஃபிஃபா உலகக் கிண்ண தொடக்க ஆட்டத்தில், ஈரான் அணி இருமுறை பின்தங்கிய நிலையிலிருந்து மீண்டு வந்து நியூசிலாந்துடன் 2-2 என்ற கோல் கணக்கில் போட்டியை சமநிலையில் முடித்தது.
ஆட்டத்தின் 7ஆவது நிமிடத்தில் கிறிஸ் வூட் (Chris Wood) கொடுத்த பந்தின் உதவியுடன், எலிஜா ஜஸ்ட் (Elijah Just) பெனால்டி பகுதிக்குள் (box) இருந்து பந்தை உதைத்து கோல் புகுத்த, நியூசிலாந்து முன்னிலை பெற்றது.
இருப்பினும், ஆட்டத்தின் 32ஆவது நிமிடத்தில் ஈரான் தகுதியான முறையில் சமநிலையை எட்டியது. ரமின் ரெசேயன் (Ramin Rezaeian) மிக அருகிலிருந்து பந்தை வலைக்குள் தட்டிவிட, லொஸ் ஏஞ்சல்ஸ் மைதானத்தில் திரண்டிருந்த பெரும்பாலான ஈரானிய ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய மதர்வெல் (Motherwell) அணியின் 26 வயது விங்கரான ஜஸ்ட், ஆட்டத்தின் 54ஆவது நிமிடத்தில் மீண்டும் கிறிஸ் வூட்டின் உதவியுடன், பந்தை கோல்கீப்பர் அலிரேசா பெய்ரான்வண்டிற்கு (Alireza Beiranvand) மேலாக தூக்கி அடித்து நியூசிலாந்தின் முன்னிலையை மீண்டும் நிலைநாட்டினார்.
ஆனால், அடுத்த 10 நிமிடங்களில் ஈரான் மீண்டும் பதிலடி கொடுத்தது, மொஹமட் மொஹெபி (Mohammad Mohebbi) தலையால் முட்டி (header) பந்தை கோல் கம்பத்தின் பின்பக்கமாக வலைக்குள் செலுத்தி ஆட்டத்தை மீண்டும் சமநிலைக்குக் கொண்டு வந்தார்.
















